Load Image
Advertisement

உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு தி.மு.க.,வின் இளைஞரணி உதாரணம்

ஈரோடு:''உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு, தி.மு.க., இளைஞரணி உதாரணம்,'' என, திமுக இளைஞரணி செயலர் உதயநிதி கூறினார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சரளையில், ஈரோடு மாவட்ட தி.மு.க., இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.

இதில், உதயநிதி பேசியதாவது: உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு தி.மு.க., இளைஞரணியை உதாரணம் காட்ட முடியும். உழைப்பு என்றால் ஸ்டாலின் என, கருணாநிதியே கூறியுள்ளார். அப்படிப்பட்ட ஸ்டாலின், 1967ல் கோபாலபுரத்தில் இளைஞரணியை துவக்கி, 2021ல் முதல்வராக பதவியேற்றார்.

தமிழகத்தில் நீட் தேர்வு தேவை இல்லை என, தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதை அகற்றியே தீர வேண்டும் என்பதற்காக, 50 லட்சம் கையெழுத்து பெற்று வருகிறோம்.

சேலம் மாநாட்டில் முதல்வரிடம், 50 லட்சம் கையெழுத்தை வழங்கி, டில்லிக்கு சென்று கொடுப்போம். இதுவரை நேரடியாக, 16 லட்சம் கையெழுத்து, போஸ்ட் கார்டு மூலம், 11 லட்சம் கையெழுத்து பெற்றுள்ளோம்.

நாங்கள் எப்போதும் மக்களை பற்றியே சிந்திக்கிறோம். ஆனால், பிரதமர் மோடி எங்கு சென்றாலும் என்னையும், முதல்வர் ஸ்டாலினையுமே நினைக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement