26ல் தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்
சென்னை:சென்னை தி.நகரில் உள்ள அகார்டு ஓட்டலில், நவ.26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கவுள்ளது என, அக்கட்சியின் பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், நவ. 26ம் தேதி காலை 10:30 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள அகார்டு ஓட்டலில் நடக்கவுள்ளது. அப்போது, மாவட்ட செயலர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். தி.மு.க., இளைஞரணி 2வது மாநாடு மற்றும் ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து, அக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!