ADVERTISEMENT
திண்டிவனம், நவ. 22-
திண்டிவனம் அருகே அரசடி விநாயகர் கோவிலில், அமைச்சர் மஸ்தான் தீபாராதனை செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், ஜக்காம்பேட்டை அரசடி விநாயகர் கோவிலில், 19ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்கவில்லை என்பதால், நேற்று பிற்பகல், அமைச்சர் மஸ்தான், கட்சியினருடன் விநாயகர் கோவிலுக்கு சென்றார்.
அமைச்சருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அப்போது, கற்பூர தட்டுடன் வந்த நாகராஜ அய்யரிடமிருந்து, அமைச்சர் கற்பூர தட்டை வாங்கி, விநாயகருக்கு தீபாராதனை செய்தார்.
வாசகர் கருத்து (15)
அப்போ தைரியமா இனிமே ராமாசாமியை கண்டுகொள்ள மாட்டோம், நாங்கள் மாறிவிட்டோம்னு சொல்றதுல என்ன தயக்கம் ?? அது இருக்கட்டும். தி.மு.க.வினரின் அடுத்த கிச்சு கிச்சு என்ன ? மண்சோறு சாப்பிடுதல், காவடி தூக்குதலும் தானே ?
கொள்கைகள் பற்றி தெரியவேண்டும்.கோயில் கூடாது என்பது அல்ல D M K ,அது கொடியவர்கள் கூடாரமாக கூடாது என்பதுதான்.பகுத்தறிவு கொண்டு அலசி பார் .அது சரி ,இருந்தாதானே .
நல்லவிஷயம்தான் . இருந்தாலும் தேனீ எம்பியிடம் ஜாக்கிரதையாக இருங்கள்
ஏக இறைவன் எங்கே போச்சு மிஸ்டர் மஸ்தான் - ஜமாத் பக்கம் சென்று விடாதே
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
திமுகவின் கெட்ட நேரம்.. உதயநிதி ஹிந்து கடவுள்களை கேலி செய்கிறார்.. முதலமைச்சர் ஹிந்து பண்டிகைகளுக்கு ஹிந்துக்களுக்கு வாழ்த்து சொல்லவே முடியாது என்று அடம்பிடிக்கிறார் .. மஸ்தான் இப்படி..