Load Image
Advertisement

ஆடு திருடியவர் கைது

மயிலாடுதுறை,:மயிலாடுதுறை பகுதியில் ஆடு மற்றும் பைக்குகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை அருகே மணக்குடி கீழிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் முத்துக்குமாரசாமி, 38; இவர் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை சேந்தங்குடி சுடுகாடு பகுதியில் மேய விட்டுள்ளார்.

டீ கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த முத்துக்குமாரசாமி 4 ஆடுகள் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சோழசக்கரநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்த துரைக்கண்ணன் மகன் ரமேஷ், 43; ஆடுகளை திருடியது தெரியவந்தது. ரமேஷை கைது செய்த போலீசார், 4 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர் விசாரணையில் அவர் 2 பைக்குகளையும் திருடி இருப்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 2 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், ரமேஷை கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement