வருத்தம்
வருத்தம் தெரிவித்த அமைச்சர்
''18ம் தேதி தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த போது, என் பேச்சின் ஊடே நான் பயன் படுத்திய வார்த்தை மாற்றுத்திறனாளி நண்பர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன். நான் மாற்றுத்திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன். அந்த வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி, பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாக புரிந்து கொள்கிறேன். என் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.-
- தங்கம் தென்னரசு
நிதித்துறை அமைச்சர்
ஏன் இவரை கைது செய்து சிறையில் அடைக்கக்கூடாது? பேசுவதெல்லாம் பேசிவிட்டு பிறகு வருத்தம், அது, இது, மண்ணாங்கட்டி என்று உருட்ட வேண்டியது.