திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில், 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய ரசாயனம், உரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறைக்கான, மத்திய இணை அமைச்சர் பகவத் குபா பங்கேற்றார்.
தொடர்ந்து, வேளாண் அறிவியல் மையம் வாயிலாக நடந்த நிகழ்ச்சியில், தலா, ஐந்து பேருக்கு காய்கறி தொகுப்பு மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு, கூட்டுறவு சங்கம் வாயிலாக கே.சி.சி., கடன் அட்டை, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி அவர் பேசியதாவது:
மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு, 6,000 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்துகிறது. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில், வீடு கட்ட அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
கிராமப்புற மக்கள் பயன்பாட்டிற்காக, தனிநபர் கழிப்பறை கட்டி கொடுக்கப்படுகிறது. வீடுதோறும், ஜல் சக்தி அபியான் திட்டத்தில் குடிநீர் மற்றும் சுயதொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பல திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார்.
மத்திய அரசு வழங்கக் கூடிய நல திட்டங்களை, தமிழக அரசு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்யக்கூடாது. அரசு அதிகாரிகள் மத்திய அரசு திட்டங்களை, ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தியா வல்லரசு நாடாக அமைய, பிரதமர் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பகவத் குபா பேசினார்.
வாசகர் கருத்து (21)
அதேபோல மாநில அரசின் திட்டங்களில் பிரதமர் பெயர் வரக்கூடாது சரியா? முதலில் சொல்வது ஓன்று பிறகு மாற்றுவது, மத்திய அரசு அதிக பங்கு கொடுப்பது போல பாவலா கட்டி பிரதமர் பேரை வைப்பது பிறகு மத்திய அரசின் பங்கை குறைத்துவிட்டு மாநில அரசு அதிக பங்கு வைக்க சொல்வது, ஆனாலும் பிரதமர் பெயர்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது என்று எதனையும் செய்யக்கூடாது சரியா?
வருமான வரி ,கலால் மற்றும் சுங்க வரி ,சேவை வரி போன்றவைகள் எல்லாம் மாநிலத்தின் மக்கள் மீது மத்திய அரசால் விதிக்கப்படும் வரி என்பது நூற்றுக்கு நூறு உண்மைதானே,மேலும் இவை எல்லாம் மத்திய அரசுக்கு வருமானம் கொழிக்கும் துறைகளே ...
இனி தேர்தல் அறிக்கைகளில் வெளி இடப்படும் வாக்குறுகிகளை கையொப்பம் இட்டு எழுதி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.இல்லை எனில் அந்தப் பதினைந்து லட்சம் கறுப்புப்பணம் வங்கியில் செலுத்தும் கதைதான் நடக்கும் ,மக்களை எளிதில் ஏமாற்றி விடுவார்கள்
இதுக்குதான் இந்தி படிக்கக்கூடாதுன்னு சொல்லறீங்க. அப்பத்தானே மோடி அத சொன்னார் அமித் ஷா இதை சொன்னார் என்று பொய் சொல்லி தமிழக மக்களை ஏமாற்ற முடியும். இந்தி தமிழர்களுக்கு புரிந்து விட்டால் இந்த கம்பி சுத்தற வேலையெல்லாம் எடுபடாது
இந்த ஆளு மந்திரிதானா, அரசியல்ல இருக்கறவரா இல்ல ஆன்மீகத்துல ஊறினவரான்னு கொஞ்சம் செக் பண்ணனும். மத்திய திட்டங்களை அப்படியே எடுத்துட்டு போயி மோடி தான் கொடுத்தாருன்னு சொல்லி மக்களுக்கு நல்லது செய்ய, அவுங்க என்ன முட்டாள்களா? எவ்வளவு தகிடுத்திட்டங்களெல்லாம் பண்ணி ஊற கொள்ளையடிக்க இந்த பதவிய அதுவும் பத்து வருட இடைவெளிக்கு பிறகு பிடித்திருக்கிறார்கள்? மன்சூர் அலிகான்கிட்ட டீசண்ட்டா பேசுன்னு சொல்றமாதிரியில்ல இருக்கு இது
தமிழகத்தில் இருந்து வருகின்ற வரியை நீங்கள் கேட்காமல் இருக்க முடியுமா?