Load Image
Advertisement

சீ ட்டு நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் கைது

 The man who cheated Rs 7 lakh in Cheetoo Company was arrested    சீ ட்டு நிறுவனத்தில் ரூ.7 லட்சம்  மோசடி செய்தவர் கைது
ADVERTISEMENT
தேனி:தேனியில் தனியார் சீட்டு நிறுவத்தில் பணிபுரிந்து போலி ரசீது மூலம் ரூ.7 லட்சம் மோசடி செய்த வழக்கில் கம்பத்தை சேர்ந்த சங்கிலி முருகனை 38,போலீசார் கைது செய்தனர்.

தேனி -- பெரியகுளம் ரோட்டில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் திண்டுக்கல் மாதவன் எக்ஸ்கியூடிவ் அலுவலராகவும், கம்பம் சங்கிலிமுருகன் 38, ஜூனியர் மேனேஜராகவும் பணி செய்தனர். இந்நிறுவனத்தின் சந்தாதாரர்களான முத்துப்பாண்டியிடம் ரூ.1.61 லட்சம், செந்தில்வேலனிடம் ரூ. 67 ஆயிரத்திற்கு போலி ரசீது வழங்கி மாதவன் பணம் வசூலித்தார். அதே போல் வேலுச்சாமி உள்ளிட்ட 5 பேரிடம் ரூ.1.62 லட்சத்தை சங்கிலி முருகன் வசூலித்தார். சில சந்தாதாரர்கள் கொடுத்த காசோலைகளையும் நிறுவன கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்தார்.

இருவரும் சேர்ந்து ரூ.7 லட்சத்து 5,102 மோசடி செய்தது தெரியவந்தது. நிறுவன மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஞான சேகரன், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இவ் வழக்கில் ராஜபாளையத்தில் பதுங்கி இருந்த சங்கிலிமுருகனை போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement