ஹைதராபாத் :தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும், கோடீஸ்வர வேட்பாளரான காங்கிரசைச் சேர்ந்த விவேக் வேங்கடசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, வரும் 30ம் தேதி சட்ட சபை தேர்தலுக்கான
ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக, அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில், முன்னாள் தலைவர் ராகுல் தலைமையில் நடந்த காங்கிரசின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., விவேக் வேங்கடசாமி, அக்கட்சியில் இணைந்தார்.
இதையடுத்து இவருக்கும், இந்த தேர்தலில் காங்., சார்பில் சென்னுார் தொகுதியில் போட்டியிட 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.
விவேக் வேங்கடசாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி இவருக்கும், இவரது மனைவிக்கும், 606 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது என தெரியவந்தது.
இதில் அசையும் சொத்துகளாக 377 கோடி ரூபாயும், அசையா சொத்துகளாக, 225 கோடி ரூபாயும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே, விவேக் வேங்கடசாமி தான் மிகப்பெரிய பணக்காரர் என அறியப்படுகிறார்.இந்நிலையில், சென்னுார், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள இவரது வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
விவேக் வேங்கடசாமி அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளதால், இந்த சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது ஆண்டு வருவாய், கடந்த 2018-19 நிதியாண்டில் 4.66 கோடியாக இருந்த நிலையில், தற்போது 6.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேபோல் இவரது மனைவியின் ஆண்டு வருவாய் இதே காலக்கட்டத்தில் 6.09 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது, 9.61 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வாசகர் கருத்து (11)
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் எட்டு மாதங்களாக விசாரணையை தொடங்காத பாஜகவின் அமலாக்கத்துறை பாஜக வில் இருந்து விவேக் வேங்கடசாமி விலகிய உடனேயே சோதனை நடத்துகிறது என்றால் மனசாட்சி உள்ள பாஜக நபர்களுக்கு இதில் உள்ள அரசியல் நிச்சயம் புரியும்.
அமலாக்கத்துறை பாஜக வின் ஏவல்துறையாக செயல்படுவது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை என நிரூபிக்கிறது.
இவர் பாஜகவில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட விவரத்தையும் வெளியிடுங்க ,
இவர் பிஜேபியில் இருக்கும் பொழுது அமலாக்கத்துறை ஏன் கம்முனு இருந்தது ? மக்கள் கேட்கிறார்கள்
திருடர்கள் எங்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும் ........... பாஜக கண்டிப்பு .............
மூர்க்க கட்சி அதற்கு எதிராக வாயை திறந்தாலே.. பாஜகவை உள்ளே தள்ளி சிறைவாசம் அனுபவிக்க செய்கிறதே. இது கொடுங்கோல் ஆட்சி என சொல்ல எவ்வளவு வேணுகோபாலர்களும் பரக்கத் அலி களும் வருவீர்கள்.. உங்களுக்கு வந்தா ரத்தம் .. மத்தவனுக்கு தக்காளி சாஸ் ஆ ??
சேர்த்தான் சிக்கினான் என்றுதான் பார்க்கவேண்டும். அப்படி பார்த்தால் திமுகவில் கூட 'மினி' அதானிகள் இருப்பது சமீபத்தில் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.