ADVERTISEMENT
தேனி:ரயில்வே கேன்டீனை டெண்டர் எடுத்து தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கூறி ரூ.73 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் சின்னமனுாரை சேர்ந்த ஜமீன்பிரபுவை 35, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் சருத்துப்பட்டியை சேர்ந்தவர் மாயன். இவருக்கு திருச்சி ரயில்வே கேன்டீனை குறைந்த விலைக்கு டெண்டர் எடுத்து தருவதாக இவரது நண்பர் சின்னமனுார் பட்டாளம்மன் கோயில் தெரு ஜமீன்பிரபு கூறினார்.
இதனை நம்பிய மாயன், ஜமீன்பிரபு, இவரது அண்ணன் ஈஸ்வரன், இவரது மனைவி வனிதா ஆகியோரிடம் ரூ. 23 லட்சம் கொடுத்தார். மேலும் மாயனின் நண்பர்கள் 9 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் வாங்கினர்.
ஆனால் வேலை பெற்று தராமலும், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றினர். இந்நிலையில் மாயன் தேனி எஸ்.பி., யிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி மூவர் மீது வழக்கு பதிவு செய்து ஜமீன்பிரபுவை கைது செய்தார்.
ஈஸ்வரன், மனைவி வனிதாவை போலீசார் தேடுகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!