Load Image
Advertisement

ஜவுளி கடை ஊழியர் கொலை: மகளை ஒரு தலையாக காதலித்தவர் கைது

தென்காசி,:தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ஜவுளிக்கடை ஊழியர் கொலையில், அவரது மகளை ஒரு தலையாக காதலித்தவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே சுள்ளக்கரை தெருவை சேர்ந்தவர் அய்யாகுட்டி 55. ஜவுளிக்கடை ஊழியர். மனைவி கனகலெட்சுமி. மகள் ஆவுடைசெல்விக்கும் 24, ராயகிரியைச் சேர்ந்த மணமகனுக்கும் நாளை (நவ., 23ல்) திருமணம் நடக்க இருந்தது.

நவ., 19 இரவில் அய்யாகுட்டி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு கிடந்த கத்திரிக்கோலால் அவரை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினார்.

புளியங்குடி போலீசார், சி.சி.டி.வி., கேமரா காட்சி பதிவுகளைக் கொண்டு விசாரித்தனர். அதன் அடிப்படையில் புளியங்குடி டி.என். புதுக்குடியை சேர்ந்த முருகன் மகன் செல்வமுருகன் 25, என்பவரை கைது செய்தனர்.

சிவில் டிப்ளமோ படித்துள்ள அவர் அய்யாக்குட்டியின் மகளை ஒருதலையாக காதலித்துள்ளார்.

திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்தவர் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார்.

போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement