பள்ளியில் துப்பாக்கிச்சூடு
திருச்சூர்,கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நைக்கனல் என்ற பகுதியில் உயர்நிலை பள்ளி உள்ளது.
இங்கு, நேற்று காலை உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர், மாணவர்கள் இருந்த வகுப்பறைக்குள் நுழைந்தார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, மேல்நோக்கி மூன்று முறை சுட்டார்.
எனினும், அங்கு இருந்த பள்ளி ஊழியர்கள் அந்நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் ஜெகன் எனவும், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் எனவும் தெரியவந்தது.
அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது, எதற்காக சுட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!