ADVERTISEMENT
ஜெய்ப்பூர், ''ஊழல், குடும்ப அரசியல், தாஜா செய்யும் போக்கு உள்ளிட்ட மூன்று தீய சக்திகள், நம் நாடு வளர்ந்த நாடாக உருவாக தடையாக உள்ளன. இவற்றின் மொத்த அடையாளமாக காங்கிரஸ் கட்சி உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு வரும், 25ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், பரன் மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
காங்கிரஸ் தலைவர்கள் கட்டுப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். இம்மாநில மக்களை, கொள்ளையர்கள், கலவரக்காரர்கள், குற்றவாளிகளிடம் அவர்கள் ஒப்படைத்து விட்டனர். அதனால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.
ஊழல், குடும்ப அரசியல், ஒரு பிரிவினரை மட்டும் தாஜா செய்யும் போக்கு உள்ளிட்ட மூன்று தீய சக்திகள், நம் நாடு வளர்ந்த நாடாக உருவாக தடையாக உள்ளன; இவை நம் நாட்டின் எதிரிகள்.
இதன் மொத்த அடையாளமாக காங்கிரஸ் உள்ளது.
இதன் காரணமாக, தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த குழந்தைகள் கூட, 'அசோக் கெலாட், உங்களுக்கு ஓட்டுகள் கிடைக்காது' என, கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (2)
ஊழல், குடும்ப அரசியல், ஒரு பிரிவினரை மட்டும் தாஜா செய்யும் போக்கு உள்ளிட்ட மூன்று தீய சக்திகள், நம் நாடு வளர்ந்த நாடாக உருவாக தடையாக உள்ளன இவை நம் நாட்டின் எதிரிகள்.... முதலில் பாஜகவை திருத்துங்கள் .........
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
We should thank our PM for canvasing for congress. Let him say about his government's achievements for the past 9.5 years of rule and ask for votes. Instead......