தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு
திருநெல்வேலி::திருநெல்வேலியில் தொழிலதிபரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி டவுன் வயல் தெருவை சேர்ந்த முருகன் மகன் சக்தி 30. அ.ம.மு.க., கட்சி பிரமுகர். கூட்டுறவு வங்கி முன்னாள் நிர்வாகி. நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று காலை 8:00 மணியளவில் குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். டவுன் ஆர்ச் பகுதியில் டூவீலரில் வந்த மூன்று பேர் அவரை கீழே தள்ளி சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடினர். கைகளில் பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது தந்தை முருகனும் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல அரிவாளால் வெட்டப்பட்டார்.
நிலம் விற்பனை தொடர்பான முன்விரோதத்தில் தாக்குதல் நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!