Load Image
Advertisement

காங்., தலைவர்கள் நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்து முடக்கம்



புதுடில்லி:சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான 751.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நேற்று அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டுள்ளது.

புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்தது.

கடன் நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்துக்கு, காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டது.

இக்கடனில் இருந்து விடுபட, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, 'யங் இந்தியன்' என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா, அவரது மகனும், எம்.பி.,யுமான ராகுல் உள்ளனர்.

இந்த பரிமாற்றத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்கு தொடர்பாக சோனியா, ராகுல் மற்றும் காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்றதடுப்புச் சட்டத்தின்கீழ் புதுடில்லி, மும்பை, லக்னோ உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் மற்றும் யங் இந்தியன் நிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.

புதுடில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகம், லக்னோவில் உள்ள நேரு பவன், மும்பையில் உள்ள ஹெரால்டு அலுவலகம் உள்ளிட்டவை முடக்கப் பட்ட சொத்துக்களில் முக்கியமானவை.

இவற்றின் மொத்த மதிப்பு, 751.9 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement