Load Image
Advertisement

மாநகராட்சிக்கு வராத மேயர்: தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டம்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு இரண்டாவது வாரமாக நேற்றும் மேயர் சரவணன் வரவில்லை. அவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம்மாநகராட்சி மேயராக தி.மு.க., சரவணன், துணைமேயராக ராஜு உள்ளனர். மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் தி.மு.க., கூட்டணியினர் பெரும்பான்மையாக உள்ளனர். மாநகராட்சியில் ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல் மேயர் காலம் தாழ்த்துவதாக புகார் கூறி தி.மு.க., கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்தனர். செவ்வாய்க்கிழமை தோறும் மாநகராட்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை மேயர், துணை மேயர் பெறுவது வழக்கம். கடந்த வாரம் மழையை காரணம் காட்டி மேயர் , மனுக்களை பெற வரவில்லை. 2வது வாரமாக நேற்றும் அவர் வரவில்லை.

எனவே தி.மு.க., மேலப்பாளையம் மண்டல தலைவி கதீஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் ரவீந்திரன், ரசூல்மைதீன், மாரியப்பன் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி வாசல் படிகளில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் அங்கேயே உணவு பொட்டலங்களை வரவழைத்து தரையில் அமர்ந்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement