வெளிப்படை தன்மையுடன் நடக்காத எம்.ஆர்.பி., செவிலியர் கலந்தாய்வு சங்கப்பொது செயலாளர் குற்றச்சாட்டு
விருதுநகர்:தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்கள் கலந்தாய்வில் காலி பணியிடங்கள் பட்டியல் முழுமையாக காண்பிக்காமலும், வெளிப்படைத்தன்மையுடனும் நடை பெறவில்லை, என தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கப் பொதுச் செயலாளர் சுபின் தெரிவித்துள்ளார் .
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நவ. 20, 21, 22 தேதிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வில் ஏற்கனவே இருந்த காலிபணியிடங்கள் பட்டியலில் காண்பிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஒரு சில காலிபணியிடங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது.
பெருந்துறை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 80 பணியிடங்கள் உள்ள நிலையில் 2 மட்டுமே காண்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 27 இடங்களுக்கு பதிலாக 6ம், திருவண்ணாமலையில் 45க்கு பதில் 9ம், தர்மபுரியில் 56க்கு 16ம் மட்டுமே காண்பித்துள்ளனர்.
மேலும் பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பம் கொடுத்த பலர் பெயர்கள் கலந்தாய்வு பட்டியலில் இல்லை. கடந்த ஆண்டுகளில் நடந்த கலந்தாய்வில் முதலில் பங்கேற்கும் செவிலியர்கள் வேறு பணியிடத்தை தேர்வு செய்தால், அந்த பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மறுநாள் கலந்தாய்வில் பங்கேற்போர் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த முறை அது பின்பற்றப்படவில்லை.
எனவே மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர், துறை செயலாளர் தலையிட்டு அனைத்து பணியிடங்களையும் வெளிப்படை தன்மையுடன் நிரப்ப வேண்டும். விண்ணப்பித்த அனைத்து செவிலியர்களின் பெயர் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். முதல் நாளில் காலியாகும் பணியிடங்களை மறுநாள் கலந்தாய்வில் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!