சம்பள உயர்வின்றி காப்பீடு திட்ட பணியாளர்கள் பரிதவிப்பு
ராமநாதபுரம்:முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பணிபுரியும் செவிலியர்கள்,தொழில் நுட்ப பணியாளர்களுக்குசம்பளத்தை உயர்த்திவழங்க அரசுஉத்தரவிட்டுள்ளது. ஆனால் இதை பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில்அமல்படுத்தாததால் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2009 முதல் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.51 நோய்களுக்கு ரூ.5 லட்சம்வரை உயர் மருத்துவ சிகிச்சைகள் அரசு, தனியார்மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் தனிவார்டுகள் திறக்கப்பட்டு அங்கு பொறுப்பு மருத்துவர் கண்காணிப்பில் வார்டு மேலாளர், செவிலியர், தொழில்நுட்பபணியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் தற்காலிகமாக பணிபுரிகின்றனர்.
முதல்வர் காப்பீடு திட்ட பணியாளர்கள் கூறுகையில்,ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.8000 சம்பளத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக 20 பேர் பணி புரிகிறோம்.
ஜூலையில் கம்ப்யூட்டர்ஆப்பரேட்டர் ரூ.18,000, வார்டு மேலாளர் ரூ.12,000, செவிலியருக்கு ரூ.18,000 என அனைவருக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வழங்காமல் கால தாமதம் செய்கின்றனர். கேட்டால் வேலையை விட்டுநிறுத்தி விடுவதாக அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.
இதே நிலைதான் தமிழகத்தில் பல அரசு மருத்துவமனைகளில் தொடர்கிறது. சம்பள உயர்வை வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!