இஸ்ரேல் அராஜகம்: பழனிசாமி கண்டனம்
சென்னை:இஸ்ரேல் நாட்டுக்கு, அ.தி.மு.க.,. பொதுச் செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பாலஸ்தீன காசாவில், பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர், இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு பலியாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர், அடிப்படை வாழ்வை இழந்து நிற்கதியாக நிற்கும் பொது மக்கள் என, காசா ஒரு பேரழிவு நகரமாக காட்சி அளிக்கிறது.
உலக நாடுகளின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல், மருத்துவமனைகள், ஐ.நா., முகாம்கள் மீது திட்டமிட்டு, பேரழிவு ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தி, அங்கு மனித உரிமைகளை மிகக்கொடூரமாக மீறும், இஸ்ரேலின் அராஜகம் கண்டனத்துக்கு உரியது.
இந்த விவகாரத்தில், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட்டு, இஸ்ரேலின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, பாலஸ்தீன விவகாரத்தில் நம் முன்னோர் கடைபிடித்த சுதந்திர பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Edappady Sir , please contact your newfound friends to get release of around 250 Israeli citizens taken as hostages by Hamas who have mingled with people of Gaza . Do not make some empty statement just to get your name in media