Load Image
Advertisement

மன்னார்குடி ஜீயருடன் திருமாவளவன் சந்திப்பு:நல்ல நோக்கம் நிறைவேற ஆசி

Thirumavalavan meeting with Mannargudi jeer: Bless the fulfillment of good intentions   மன்னார்குடி ஜீயருடன்  திருமாவளவன் சந்திப்பு:நல்ல நோக்கம் நிறைவேற ஆசி
ADVERTISEMENT
சென்னை:ராஜபாளையத்தில் நடந்த திருமண விழாவில், மன்னார்குடி சம்பத்குமார ராமானுஜ ஜீயரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் சந்தித்து உரையாடினர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கடந்த 19ம் தேதி, தொழிலதிபர் குவைத் ராஜா இல்ல திருமண விழா நடந்தது. அதில் மன்னார்குடி ஜீயர், திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அங்கு ஜீயரை சந்தித்த திருமாவளவன், அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார். பின்னர், இருவரும் அருகருகே இருக்கையில் அமர்ந்து, சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர். இந்த படங்கள், சமூக ஊடகங்களில் வெளியாகின. இந்த சந்திப்பை ஆதரித்தும், விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, மன்னார்குடி சம்பத்குமார ராமானுஜ ஜீயர் கூறியதாவது:

திருமண விழாவில் தற்செயலாகத்தான் திருமாவளவனை சந்தித்தேன். மிகுந்த மரியாதை, அன்புடன் என்னிடம் பேசினார். பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பெற்றார். அவரது நல்ல நோக்கங்கள் நிறைவேற, நான் ஆசி வழங்கினேன்.

நான் இருக்கையில் அமர்ந்ததும், என் அருகில் அமரலாமா என கேட்டார். இது என்ன கேள்வி. தாராளமாக அமருங்கள் என்றேன். பின், இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்; பரஸ்பரம் நலம் விசாரித்தோம்.

துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலாங்குறிச்சி அருகே அகிலாண்டபுரத்தில் உள்ள, ஸ்ரீ செங்கமலம் ராஜகோபாலன் கோசாலைக்கு, ஜான்பாண்டியன் போன்றவர்கள் வருகை தந்துள்ளனர். தாங்களும் வர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். எங்கள் மடத்திற்கும் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தேன். மகிழ்ச்சியுடன் வருவதாக உறுதி அளித்தார். மற்றபடி வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (3)

  • Raa - Chennai,இந்தியா

    இதற்கு, நான் ஆசி வழங்கவில்லை என்றெ சொல்லி இருக்கலாமே?

  • sankar - Nellai,இந்தியா

    இவன் எல்லாம் நல்லா பேசுவான் - கூட்டத்தில் வேறுமாதிரி மார்தட்டி பெயர்வாங்குவான் - நெஞ்சம் முழுக்க வஞ்சம் நிறைத்த மனிதன் - சீட்டர் - ஜியர் அவர்களே ஜாக்கிரதை

  • Magesh Magesh -

    தேர்தல் நெருங்கும் போது இதெல்லாம் ரொம்ப சகஜமாகிவிடும். எதையும் மறக்கும் ஜென்மங்களாக இருந்தால் இதெல்லாம் சாத்தியம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement