Load Image
Advertisement

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு

பெரியகுளம்:பெரியகுளத்தில் பட்டதாரி பெண்ணுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனிமாவட்டம் பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்ட தெருவை சேர்ந்த பொன்ராஜ் மகள் மகாலட்சுமி 22. இளங்கலை பட்டதாரி.

அரசு போட்டிதேர்வு எழுத தேனியில் கோச்சிங் சென்டரில் படிக்கும்போது தேனி அல்லிநகரம் ஒண்டிவீரன் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் 50, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பாலகிருஷ்ணன், இவரது மனைவி துர்கா தேவி 45, பாலகிருஷ்ணன் தங்கை மகாலட்சுமி 42, மைத்துனர் மாரிசாமி 45, ஆகியோர் மகாலட்சுமி வீட்டுக்கு சென்று பொன்ராஜிடம், 'தாங்கள் ரயில்வே துறையில் வேலை வழங்கும் கமிட்டியில் உள்ளதாகவும், மகாலட்சுமிக்கு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.11 லட்சம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்றனர். 2021 டிச.,29 முதல் தவணையாக ரூ. 2 லட்சம், இரண்டாவது தவணையாக ரூ.3 லட்சம், மூன்றாவது தவணையாக ரூ.4 லட்சம், நான்காவது தவணையாக ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ.11 லட்சம் கொடுத்துள்ளார்.

2022 ஜூலை 7 ல் மருத்துவ பரிசோதனைக்கு மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு மகாலட்சுமியை வரவழைத்தனர். போலியான வேலைக்கான உத்தரவை வழங்கினர்.

இதன் பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதை மகாலட்சுமி, பொன்ராஜ் அறிந்தனர். பாலகிருஷ்ணனிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக பாலகிருஷ்ணன், துர்கா தேவி, மகாலட்சுமி, மாரிச்சாமி ஆகியோர் மீது வடகரை எஸ்.ஐ., பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement