Load Image
Advertisement

எஸ்.ஐ.,யை பணி செய்ய விடாமல் தடுத்தவருக்கு மூன்றாண்டு சிறை

 Three years imprisonment for the person who prevented the SI from working     எஸ்.ஐ.,யை பணி செய்ய விடாமல் தடுத்தவருக்கு மூன்றாண்டு சிறை
ADVERTISEMENT
ராமநாதபுரம்:ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., யாக 2019 ல் பணிபுரிந்தவர் நந்தகுமார். இவர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் 2019 ஜன.10 ல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மண்டபம் பகுதியில் இருந்து காரில் ராமநாதபுரத்தில் அஜித் நடித்த படத்தை ரசிகர் காட்சி காண வந்தனர்.

இவர்கள் காரில் தொங்கியபடி கூச்சலிட்டபடி வந்தனர். நந்தகுமார் காரை நிறுத்தி எச்சரிக்கை செய்ய முயன்றார். காரை ஓட்டிய மண்டபம் ரியாஸ்கான் 39, எஸ்.ஐ., யின் இரு சக்கர வாகனத்தை இடித்து தள்ளி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

ரியாஸ்கானை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. ரியாஸ்கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 9 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement