ADVERTISEMENT
திருவண்ணாமலை:''மத்திய அரசு செயல்படுத்தக்கூடிய அனைத்து நலத்திட்டங்களும், மக்களை சென்றடைய வேண்டும். இதில், முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்யக்கூடாது,'' என, மத்திய இணை அமைச்சர் பகவத் குபா பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில், 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், மத்திய ரசாயனம், உரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறைக்கான, மத்திய இணை அமைச்சர் பகவத் குபா பங்கேற்றார்.
தொடர்ந்து, வேளாண் அறிவியல் மையம் வாயிலாக நடந்த நிகழ்ச்சியில், தலா, ஐந்து பேருக்கு காய்கறி தொகுப்பு மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு, கூட்டுறவு சங்கம் வாயிலாக கே.சி.சி., கடன் அட்டை, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி அவர் பேசியதாவது:
மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டிற்கு, 6,000 ரூபாயை வங்கி கணக்கில் செலுத்துகிறது. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில், வீடு கட்ட அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. கிராமப்புற மக்கள் பயன்பாட்டிற்காக, தனிநபர் கழிப்பறை கட்டி கொடுக்கப்படுகிறது. வீடுதோறும், ஜல் சக்தி அபியான் திட்டத்தில் குடிநீர் மற்றும் சுயதொழில் செய்ய குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பல திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசு வழங்கக்கூடிய நல திட்டங்களை, தமிழக அரசு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்யக்கூடாது.
அரசு அதிகாரிகள் மத்திய அரசு திட்டங்களை, ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்தியா வல்லரசு நாடாக அமைய, பிரதமர் உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இவ்வாறு பகவத் குபா பேசினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!