Load Image
Advertisement

பி.எம்., கிசான் செறிவூட்டல் இயக்கம்தமிழகத்தில் விருதுநகர் தேர்வு

விருதுநகர்:'தமிழகத்தில் பி.எம்.,கிசான் செறிவூட்டல் இயக்கம் என்பது முன்னோடி திட்டமாக செயல்படுத்த விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய அரசு மூலம் பி.எம்., கிசான் சம்மான் நிதி எனப்படும் சிறு, குறு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச வருவாய் ஆதார திட்டத்தை செயல்படுத்துகிறது.

இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.6000 வருவாய் ஆதாரமாக 3 தவணைகளில் வழங்கப்படுகிறது. இது சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்திற்கு தேவையான இடுபொருட்கள், சாகுபடிக்கு தேவையான செயல்பாடுகளை செய்து கொள்ள உதவும். இத்திட்டத்தில் நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள விவசாயிகள் இதுவரை பயனடையாமல் இருந்தால் அவர்களையும் இதில் இணைக்க பி.எம்.கிசான் செறிவூட்டல் இயக்கம் துவங்கப்பட உள்ளது. இதை முன்னோடி திட்டமாக நாடு முழுவதும் தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் செய்கிறது. தமிழகத்தில் விருதுநகரில் மத்திய அரசு செயல்படுத்துகிறது. தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் பயன்பெற செய்வதே இந்த செறிவூட்டல் இயக்கத்தின் முக்கிய நோக்கம்.இதில் வருவாய்த்துறை, வேளாண்துறை அலுவலர்கள் இணைந்து விவசாயிகளின் நில ஆவணங்கள் சரிபார்க்கின்றனர்.

வேளாண் உதவி அலுவலர்களிடம் விவசாயிகள் சம்மதத்துடன் ஓ.டி.பி., முகம் அனுமதி முறையில் இ--கையெழுத்து பெறப்படுகிறது. இதன் மூலம் நேரடியாக அவர்களுக்கே செல்வது உறுதி செய்யப்படுவதுடன், நுாறு சதவீதம் அனைத்து விவசாயிகள் பயனடைவதும் சாத்தியம் ஆகிறது என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement