போக்குவரத்து தொழிற்சங்கம் நாளை போராட்டம்
சிவகங்கை:தமிழகத்தில் 6 போக்குவரத்து மண்டல தலைமையகம் முன் நாளைபோக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடத்தவுள்ளனர்.
தமிழகத்தில் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 6 போக்குவரத்து மண்டல தலைமையகம் முன் இப்போராட்டம் நடக்கிறது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கிட வேண்டும், பழைய பென்ஷனை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டை அமல்படுத்தவேண்டும், தொழிலாளர்களுக்கு விடுப்பு மறுப்பு, ஆப்சென்ட், கூடுதல் பணி பார்க்கச் சொல்வது, கடும் தண்டனை, பணியிடமாற்றத்தை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!