Load Image
Advertisement

அதிக லாபம் ஆசையில் ரூ.21 லட்சம் இழந்த பெண்

தஞ்சாவூர்:தஞ்சாவூர், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் பாசில் அகமது, 25; தனியார் மொபைல் நிறுவனத்தில், நெட்வொர்க் இணைப்பு ஏஜன்சி நடத்தி வந்தார்.

மதுரை மாவட்டம், மேலுாரை சேர்ந்த திவ்யா, 28, என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டதால், இன்டர்நெட் இணைப்பு கொடுப்பதற்கான ஏஜன்சியை எடுத்தால், அதிக லாபம் கிடைக்கும் என, பாசில் அகமது ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

நம்பிய திவ்யாவிடம், தனியார் மொபைல் நிறுவனத்தின் போலி ஒப்பந்த பத்திரத்தை கொடுத்து, குறிப்பிட்ட தொகையை பெற்றுள்ளார்.

பின், 2021 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை, இன்டர்நெட் இணைப்பு கொடுக்க தேவையான பொருட்களை வாங்க வேண்டும் எனக் கூறி, பல தவணைகளாக, திவ்யாவிடம், 21 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதன் பின், பாசில் அகமதுவை தொடர்பு கொள்ள முடியவில்லை.

திவ்யா, புகாரில் பாசில் அகமது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement