Load Image
Advertisement

எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் கைது

 Sri Lankan fishermen arrested across the border    எல்லை தாண்டிய  இலங்கை மீனவர்கள் கைது
ADVERTISEMENT
ராமேஸ்வரம்:தனுஷ்கோடி 6ம் தீடை அருகே, இந்திய கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் நேற்று மதியம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, இந்திய கடலோர காவல் படையினர், ஹோவர்கிராப்ட் கப்பலில் ரோந்து வந்த போது, அவர்களை கண்டனர்.

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு, அவர்களை அழைத்து வந்து தனுஷ்கோடி மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள், இலங்கை, தலைமன்னாரை சேர்ந்த அப்துல் ஹமீது, 40, விமல், 26, உள்ளிட்ட ஐந்து பேர் என தெரியவந்தது. படகை பறிமுதல் செய்த போலீசார், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை சிறையில் அடைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement