Load Image
Advertisement

தன்னார்வலர்கள் முயற்சியால் பொலிவான சுகாதார நிலையம்

 A health center made bright by the efforts of volunteers    தன்னார்வலர்கள் முயற்சியால் பொலிவான சுகாதார நிலையம்
ADVERTISEMENT
குன்னுார்:நீலகிரி மாவட்டம், குன்னுார் கொலக்கம்பை ஆரம்ப சுகாதார நிலையத்தால், 57 கிராம மக்கள், 14 குக்கிராம பழங்குடியின மக்கள் பயன் பெறுகின்றனர்.

இதை மேம்படுத்த, பிரதமர் மோடியால் பாராட்டு பெற்ற தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி மற்றும் பலர் திட்டமிட்டனர். தொடர்ந்து, 85 லட்சம் ரூபாயில், 8 பொது வார்டுகள்; தொழிலாளர் வார்டு; ஐ.சி.யூ., 7 படுக்கை வசதிகள் உட்பட நவீன வசதிகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைத்தனர்.

இதை தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், ''ஏழை, எளிய கிராம மக்களின் நலனுக்காக, நவீன முறையில் தன்னார்வலர்களால் பொலிவுபடுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் சிறப்பாக உள்ளது,'' என்றார்.

விழாவில், மாவட்ட கலெக்டர் அருணா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement