Load Image
Advertisement

கர்நாடகா நோக்கி பேரணி ஓசூரில் 145 விவசாயிகள் கைது

 145 farmers arrested in Hosur rally towards Karnataka    கர்நாடகா நோக்கி பேரணி ஓசூரில் 145 விவசாயிகள் கைது
ADVERTISEMENT
ஓசூர்:தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்று தராமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீரை திறக்கும் போராட்டம் நேற்று நடந்தது.

இதற்காக, தமிழக எல்லையான ஓசூர், மூக்கண்டப்பள்ளியில் இருந்து, கர்நாடகா மாநிலம் நோக்கி, விவசாயிகள் நடைபயணம் புறப்பட்டனர்.

தமிழக அரசு, காவிரி நீரை பெற்று தராமல், விவசாயிகளுக்கு துரோகம் செய்ததை எடுத்துக் காட்டும் வகையில், விவசாயிகள் அனைவரும் நெற்றியில் நாமம் போட்டு, தலையில் காலி மண்பானையுடன் பேரணி சென்றனர்.

ஓசூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் மண்பானைகளை சாலையில் போட்டு உடைத்தனர்.

சங்க மாநில தலைவர் வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், 15 பெண்கள் உட்பட 145 பேரை போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement