தூத்துக்குடியில் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் உலக மீனவர் தின விழா கொண்டாடப்பட்டது. கவர்னர் ரவி இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மீனவ சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு விருதுகள், மீனவ ஆளுமை விருதுகள், சமூக செயல்பாட்டாளர் விருதுகளை வழங்கினார்.
அவர் பேசியதாவது:
உலக மீனவர் தினத்தில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. மீனவர்களின் கோரிக்கைளை கேட்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். செப்.21ல் மீனவரிடம் குறைகளை கேட்டறிந்து அதனை மத்திய அரசிடம் உடனடியாக தெரிவித்தேன். மேலும் தனிப்பட்ட முறையில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர், வெளியுறத்துறை அமைச்சர் சந்தித்து மீனவர்கள் பிரச்னை குறித்தும் பேசினேன். அனைத்து கோரிக்கைகளையும் நான் நிறைவேற்றிட முயற்சிப்பேன்.
நமது மீனவர்கள் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்பிலும் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். தங்கள் உயிரை பணயம் வைத்து கடலில் மீன் பிடித்து மக்களுக்கு சத்தான மீன்களை வழங்குகின்றனர். மீனவர்கள் நாட்டின் முதல் பாதுகாவலர்கள் ஆவர்.
நமது இந்திய தேசம் மிகப்பெரிய கடல் பரப்பை கொண்டது. நாட்டை பாதுகாக்க எவ்வளவு படை இருந்தாலும் கடலை பாதுகாக்க மீனவர்கள் உள்ளனர். மரைன் போலீசில் மீனவ இளைஞர்கள் பங்கு பெற வேண்டும். கடலோர காவல் படையில் மேலும் இளைஞர்களை சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன். ஏனென்றால் அவர்களால் தான் கடல்பரப்பை காப்பாற்ற முடியும். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மீனவர்கள் நினைத்தால் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரலாம்.
உறுதுணை
22 மீட்டர் நீளம் கொண்ட படகுகளுக்கு லைசன்ஸ் இல்லை. அதை சரி செய்யப்படும். மீன்பிடித் தொழில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. மீனவ சமுதாயத்தில் சரியான பிரதிநிதித்துவம் இல்லாததால் சட்டசபை, போக்சபா, ஊராட்சியில் பின்னடைவு உள்ளது. பிரதமர் மீனவர்களுக்கு தேவையானதை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய மீனவர் மேம்பாட்டு திட்டம் வருங்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை தரும். மீனவர்களின் கோரிக்கையை கேட்க எப்போதும் தயாராக இருக்கிறேன். மீனவர் சமுதாயம் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்றார். தொடர்ந்து அவர் தூத்துக்குடி பனிமயமாதா சர்ச்சில் வழிபாடு மேற்கொண்டார். அவருக்கு பங்கு தந்தை யேசுதாசன் பனிமயமாதா புகைப்படம் வழங்கினார்.பின்னர் தனியார் விடுதியில் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கவர்னர் கலந்துரையாடினார்.
வாசகர் கருத்து (2)
மாநில அரசுக்கு அந்த அதிகாரம் கிடையாது தம்பி - இந்திய மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு அந்த அதிகாரம், இறையாண்மை உண்டு - அரைகுறையா சட்டம் படிச்சு இருக்க என்று தெரியுது
only a elected government can resolve issues. Appointed persons has no authority to resolve issues. let wisdonm prevail.