நிருபர் கடையில் குண்டு வீசிய பிளஸ் 2 மாணவர் சிக்கினார்
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பட்டியலின மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை ஆக., 9ல் சக மாணவர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் மற்றும் இரண்டு சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவங்களுக்கு பின், அங்கு அரசியல்வாதிகள் அடிக்கடி வரத் துவங்கினர். இது குறித்த செய்திகளை அப்பகுதி தனியார் 'டிவி' நிருபர் வானமாமலை, 50, வெளியிட்டார்.
அவர், நாங்குநேரி கோர்ட் வளாகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, 9:00 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், வானமாமலை கடை மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார்.
மாணவன் மீது ஏற்கனவே ஒரு சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளது. அது குறித்த செய்தி வெளியானதால் ஆத்திரத்தில் குண்டு வீசியது தெரியவந்தது. வீசப்பட்ட மூன்று குண்டுகளில் ஒன்று மட்டும் வெடித்து, கடையின் பிளக்ஸ் போர்டு சேதமானது.
வானமாமலையும், அவரது மனைவியும் கடையில் இருந்தனர். ஆனாலும், காயமின்றி தப்பினர். நீதிமன்ற வளாகம் அருகே நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து எஸ்.பி., சிலம்பரசன் நேரில் விசாரித்தார்.
மாணவனை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பினர். வானமாமலை வீடு, கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!