ADVERTISEMENT
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அம்பாத்துறை இடையே கொழிஞ்சிப்பட்டி ரயில் பாதையில் இருந்த சிமென்ட் கல் மீது, சென்னை எழும்பூரில் இருந்து துாத்துக்குடிக்கு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி சென்றது.
விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் ரயிலை கவிழ்க்க சதியா என, திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சிமென்ட் கல்லை கைப்பற்றி விசாரித்தனர்.
இதில், கொழிஞ்சிப்பட்டி அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியதால், தண்டவாளத்தை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் சிமென்ட் கல் வைத்தது தெரிந்தது.
தொடர்ந்து, கிராம மக்களை போலீசார் எச்சரித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!