Load Image
Advertisement

நாகூர் ஹனீபா பேரன் வீட்டிற்கு சீல் வைக்க முயன்றதால் பரபரப்பு

 Nagor Haneefah tried to seal his grandsons house, creating a stir    நாகூர் ஹனீபா பேரன் வீட்டிற்கு சீல் வைக்க முயன்றதால் பரபரப்பு
ADVERTISEMENT
நாகப்பட்டினம்:நாகை அடுத்த நாகூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் ஹாரூன் ரசீத், 40; பிரபல பாடகர் ஹனீபாவின் பேரன். இவர், வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி, இரு குழந்தைகளுடன் நாகூரில் வசிக்கிறார்.


வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் ஜெயினாலாதீன் உத்தரவின்படி, 10 பேர் கொண்ட வக்பு வாரிய குழுவினர், நாகூர் வந்தனர். ஹாரூன் ரசீத் வீட்டிற்கு சென்றவர்கள், அவரது வீட்டின் வாசலில் இருந்த சிப்ஸ் கடைக்கு சீல் வைத்தனர். பின், ஹாரூன் ரசீத் வீட்டிற்கு சீல் வைக்க முயன்றனர்.
தகவலறிந்து அங்கு திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், 'பல தலைமுறைகளாக அனைத்து வரிகளையும் கட்டி வசித்து வருகிறோம்.

'எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஆண்கள் இல்லாத வீட்டிற்குள் எப்படி நுழைந்தீர்கள்' என, கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், சீல் வைக்காமல் வக்பு வாரிய அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

அதிகாரிகள் கூறுகையில், 'இந்த வீட்டின் அடிமனை வக்பு வாரியத்திற்கு சொந்தமானது. வாடகை செலுத்த பல முறை அறிவிப்பு வெளியிட்டும் பதில் இல்லை. இதனால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement