Load Image
Advertisement

104 வயது அக்கா இறந்த அதிர்ச்சியில் 102 வயதான தம்பியும் உயிரிழப்பு

 A 102-year-old brother also lost his life in the shock of the death of his 104-year-old sister   104 வயது அக்கா இறந்த அதிர்ச்சியில் 102 வயதான தம்பியும் உயிரிழப்பு
ADVERTISEMENT
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனுார் பஞ்., ஜனதாபுரத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு கவுண்டர். இவரது மனைவி வள்ளியம்மாள், 104. இவருக்கு இரு மகன்கள், ஐந்து மகள்கள்.

கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், வள்ளியம்மாள் கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தார். வயது முதிர்வால் மகன் தனபால் வீட்டில் வசித்தார்.

ஐந்து தலைமுறை கண்ட வள்ளியம்மாளுக்கு, பேரன், பேத்திகள், கொள்ளுபேரன், கொள்ளு பேத்திகள் என, 65 பேர் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை வயோதிகம் காரணமாக அவர் இறந்தார். மூதாட்டி இறக்கும் முன் வரை, உடலில் எந்த பிரச்னையும் இல்லாமல் தன் பணிகளை தானே செய்து வந்துள்ளார்.

வள்ளியம்மாளின் இறுதி சடங்கில் அதே ஊரில் வசிக்கும், 102 வயதான அவரது தம்பி துரைசாமி பங்கேற்றார். தன் அக்காவின் உடலை பார்த்து அழுத போது, சிறிது நேரத்திலேயே அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

அவருக்கு நான்கு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். ஐந்து தலைமுறை கண்ட துரைசாமிக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி, என, 57 பேர் உள்ளனர்.

வள்ளியம்மாள், துரைசாமி ஆகியோர், 100 ஆண்டுகளை கடந்து, உடலில் எந்த நோயும் இல்லாமல் இருந்ததை, அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நினைவு கூர்ந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement