சென்னை, திருச்சி நகை கடைகளில் 2வது நாளாக அமலாக்க துறை ரெய்டு
சென்னை:சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சென்னை, திருச்சியில் உள்ள நகைக்கடைகள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை, பாரிமுனை என்.எஸ்.சி., போஸ் சாலை மற்றும் சவுகார்பேட்டை பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட நகை கடைகள், பட்டறைகள், தங்க நகை மொத்த வியாபார கடைகள் உள்ளன. வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில், அவர்கள் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, 2020ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, 500 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததை கண்டறிந்தனர்.
தற்போது, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவது பற்றி, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களாக நகை கடை உரிமையாளர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். ஆறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
அதே போல, திருச்சி, பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின் ஜுவல்லரி, சூர்யா ஜுவல்லரி, ஜாபர்ஷா தெருவில் உள்ள ரூபி ஜுவல்லரி மற்றும் விக்னேஷ் ஜுவல்லரி ஆகிய மொத்த வியாபார கடைகள், உரிமையாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம், வாங்கி விற்கப்பட்டதா என்றும், அதிகளவில் தங்கம் விற்பனை நடந்ததாலும், மொத்த வியாபார நகைகடைகளில், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது.
மேலும், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் சிக்கிய, பிரணவ் ஜுவல்லரிக்கு, விக்னேஷ் ஜுவல்லரியினர் அதிகளவில் தங்கம் விற்றுள்ளனர். அதற்கு பாக்கியும் உள்ளது.
இது குறித்து, அவர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை. பிரணவ் ஜுவல்லரிக்கும், விக்னேஷ் ஜுவல்லரிக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் சோதனை நடந்ததாக தெரிகிறது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!