Load Image
Advertisement

10 மாதங்களில் 15 காப்புரிமை  வேளாண் மாணவர்கள் அசத்தல்

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பிப்., மாதம் முதுநிலை மற்றும் பிஎச்.டி., மாணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரத்யேகமாக மாணவர்களுக்கான காப்புரிமை மையம் துவக்கப்பட்டது.

இம்மையம் வாயிலாக, முதுநிலை, பிஎச்டி., இறுதியாண்டு மாணவர்களின் திட்ட செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் காப்புரிமை பெற வேண்டும் என்ற நோக்கில், ஆராய்ச்சிகளை ஆர்வமாக மேற்கொள்ள துவங்கியுள்ளதாக பல்கலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பிப்., முதல் தற்போது வரை, 42 காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், 14 காப்புரிமைகள் மற்றும் ஒரு பதிப்புரிமையை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள், வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, முதுநிலை பிரிவு டீன் செந்தில் கூறியதாவது:

மாணவர்கள் ஆராய்ச்சிகளை பெயரளவில் செய்வதை தடுக்கும் வகையில், பிரத்யேக காப்புரிமை மையம் துவக்கப்பட்டு, 10 மாதங்களில், 42 இயந்திர வடிவமைப்பு காப்புரிமை பதிவு செய்துள்ளோம்.

அதில், 14 இயந்திர வடிவமைப்பு மற்றும் ஒரு பதிப்புரிமைக்கு காப்புரிமை பெற்றுள்ளோம். இன்னும், 27 பதிவுகள் நிலுவையில் உள்ளன.

முருங்கையில் தோல், விதை தனியாக பிரித்தெடுத்தல், உணவுகளில் நிறமிகள் பிரித்தெடுத்தல், பயிர்களை எடுத்தல் போன்ற பல்வேறு இயந்திரங்களுக்கு, புதிய டிசைன்களை மாணவர்கள் உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்றுள்ளனர்.

அடுத்தகட்டமாக, பல்கலையின் வேளாண் வணிக மேம்பாட்டு நிறுவனம் சார்பில், இயந்திரங்கள் வடிவமைக்கவும், வணிக ரீதியாக எடுத்து செல்வதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இதனால், பல மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement