ரூ.60 லட்சம் கொள்ளை முயற்சி சஸ்பெண்ட் சிறை வார்டன் கைது
திருப்பத்துார்:திருப்பத்துார் டவுன் பகுதியில் கவுசிக் என்பவருக்கு சொந்தமான, 'பூபாளம் ஜுவல்லரி' என்ற நகைக்கடையின் ஊழியர்கள் அஜித்குமார், 23, மற்றும் பரத், 35.
இருவரும், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு நகை விற்பனை பணம், 60 லட்சம் ரூபாயை, புதுப்பேட்டை ரோடு செல்லும் சாலையில் உள்ள, எச்.டி.எப்.சி., வங்கியில் செலுத்த சென்றனர்.
இதை நோட்டமிட்ட ஒரு கும்பல், பைக்கில் பின் தொடர்ந்து, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், அஜித்குமார், பரத் மீது மிளகாய் பொடி துாவி, பணத்தை பறிக்க முயன்றது.
சுதாரித்த இருவரும், பணத்தை இருக்கமாக பிடித்துக் கொண்டதால், கும்பல் அங்கிருந்து தப்பியது.
திருப்பத்துார் போலீசார், கொள்ளை முயற்சியில் தொடர்புடைய, திருப்பத்துாரை சேர்ந்த பிரபாகரன், 38, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், அவர், பெங்களூரைச் சேர்ந்த கூலி படையினரை திருப்பத்துார் வரவழைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிந்தது.
அவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன், வேலுார் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்தபோது, குற்றவாளிகளுடன் சேர்ந்து சதி தீட்டம் தீட்டுதல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர் எனவும் தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!