தேர்தல் பிரசாரம்
ஆசிய நாடான தாய்லாந்தில், ஒரே பாலின உறவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பாக, பலமுறை விவாதிக்கப்பட்டது.
ஆனால், முடிவு எதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், பியூ தாய் கட்சி, கடந்த ஆகஸ்டில் ஆட்சியைப் பிடித்தது.
இந்நிலையில், பிரதமர் ஸ்ரீதா தவிசின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில், சிவில் சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆண் - பெண், கணவன் - மனைவி என்ற வார்த்தைகளுக்கு பதிலாக, தனிநபர்கள், திருமண கூட்டாளிகள் என திருத்தம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான மசோதா, டிச., 12ல் துவங்கும் பார்லிமென்ட் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என, பிரதமர் ஸ்ரீதா தவிசின் கூறியுள்ளார்.
ஓய்வூதிய நிதி
இதைத் தொடர்ந்து, ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில், ஓய்வூதிய நிதி சட்டமும் திருத்தப்பட உள்ளது.
தற்போதைய நிலையில் ஆசியாவில் தைவான், நேபாளம் ஆகிய நாடுகளில் மட்டுமே ஒரே பாலினத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதில் தாய்லாந்தும் விரைவில் இணைய உள்ளது.
வாசகர் கருத்து (4)
எங்கிருந்தாலும் அரசியல்வாதிகள், அரசியலவியாதிகள் தான். ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள், மானம் கெட்ட பிழைப்பு.
விருப்பப்பட்டால் தமிழகத்திலும் இதுபோன்ற சட்டங்களை கொண்டுவருவோம். யார் இப்படி கூற வாய்ப்பிருக்கு?
இதை முதலில் உங்க குடும்பங்களில் செயல்படுத்துங்க.....
பட்டாயா பப்பு இனிமேல் என்ன செய்வார் ????