அ.தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று மாலை, சென்னையில் பழனிசாமி தலைமையில் நடந்தது. துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் வேலுமணி நன்றி கூறினார். கூட்டத்தில், பழனிசாமி பேசியுள்ளதாவது:
பூத் கமிட்டி அமைக்கும் பணி, பல மாவட்டங்களில் முழுமையாக நிறைவடைந்துள்ளது. சில மாவட்டங்களில், 75 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. அந்த மாவட்டங்களில், மீதமுள்ள பணியை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், இப்பணிகளை டிச., 4க்குள் முடிக்க வேண்டும். அதன்பின், தேர்தல் பணிகளை துவக்க வேண்டும்.
பூத் கமிட்டியில், 45 வயதுக்கு உட்பட்டவர்களை நியமிக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர்கள்தான், அப்பதவியில் இருந்து கட்சிப் பணியாற்ற வேண்டும். அவர்கள்தான் கட்சியின் அஸ்திவாரம்.
தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு மாவட்ட செயலர்களே பொறுப்பேற்க வேண்டும். எனவே, கவனமுடன் செயல்படுங்கள்.
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். ஆனால், நாம் ரகசிய உறவு வைத்துள்ளதாக, தி.மு.க., பிரசாரம் செய்து வருகிறது. இது தவறு என்பதை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிய பின், சிறுபான்மையின மக்கள் நம்மை நோக்கி வருகின்றனர். அவர்களுக்கு கட்சியில் வாய்ப்பு கொடுங்கள்.
தி.மு.க., அரசு மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த முறை பலவீனமாக இருந்த, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி:பா.ஜ.,வுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. முடிந்த கதை தொடராது. மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும்போது, மக்களிடம் எடுத்து சொல்வோம். தி.மு.க., சந்தர்ப்பவாத கட்சி. ரகசிய உறவு வைத்துக் கொள்வதில், தி.மு.க., போன்று யாரும் அரசியல் செய்ய முடியாது. அந்த வித்தை அக்கட்சிக்குதான் தெரியும். முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில், நாங்கள் நிரபராதி என்பதை, நீதிமன்றத்தில் நிலைநாட்டுவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்
வாசகர் கருத்து (37)
PAAVAM EDHAI THINNAL PITHAM THELIYM ENA ALAIGIRAAR.
எங்களுக்கு பா ஜ க வுடன் கள்ள உறவு கிடையாது தி மு க வுடன் மட்டுமே கள்ள உறவு உள்ளது என்று சொல்ல வருகிறார்
😀😀😀😀😀😀
தேர்தலுக்குப் பிறகு தமிழக நலனுக்காகவும் நாட்டின் ஒற்றுமைக்கும் (வெற்றிபெற்ற பிஜெபி ) கட்சியை ஆதரிக்கிறோம் என்று பல்டி அடிப்பார்கள்.😗😇 இது தாய்க்கழகத்தின் ஆதிகால டெக்னிக்.
எப்படி எல்லாம் பேசி மக்களை நம்ப வைக்க வேண்டி உள்ளது...?