ADVERTISEMENT
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனுார் பஞ்., ஜனதாபுரத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு கவுண்டர். இவரது மனைவி வள்ளியம்மாள், 104. இவருக்கு இரு மகன்கள், ஐந்து மகள்கள்.
கணவர் ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், வள்ளியம்மாள் கூலி வேலை செய்து தனியாக வசித்து வந்தார். வயது முதிர்வால் மகன் தனபால் வீட்டில் வசித்தார். ஐந்து தலைமுறை கண்ட வள்ளியம்மாளுக்கு, பேரன், பேத்திகள், கொள்ளுபேரன், கொள்ளு பேத்திகள் என, 65 பேர் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை வயோதிகம் காரணமாக அவர் இறந்தார்.
மூதாட்டி இறக்கும் முன் வரை, உடலில் எந்த பிரச்னையும் இல்லாமல் தன் பணிகளை தானே செய்து வந்துள்ளார்.வள்ளியம்மாளின் இறுதி சடங்கில் அதே ஊரில் வசிக்கும், 102 வயதான அவரது தம்பி துரைசாமி பங்கேற்றார். தன் அக்காவின் உடலை பார்த்து அழுத போது, சிறிது நேரத்திலேயே அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
அவருக்கு நான்கு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். ஐந்து தலைமுறை கண்ட துரைசாமிக்கு பேரன், பேத்திகள், கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி, என, 57 பேர் உள்ளனர்.
வள்ளியம்மாள், துரைசாமி ஆகியோர், 100 ஆண்டுகளை கடந்து, உடலில் எந்த நோயும் இல்லாமல் இருந்ததை, அவரது
குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் நினைவு கூர்ந்தனர்.
வாசகர் கருத்து (3)
ஐய்யோ இன்னைக்கு, நாளைக்கு இறந்து விடுவோமோ என்ற பயத்திலேயே எழுபது, எண்பது வயதை கடந்தவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் இந்த காலத்தில் இறுதிவரை பாடுபட்டு சாப்பிட்ட இவர்களை நினைக்கையில் எனக்கு பொறாமையாக உள்ளது.... ஆன்மா சாந்தி அடையட்டும்....
பாசமலர் படம் பார்க்காத இளைய தலைமுறையினருக்கு இது ஒரு அதிசய செய்தி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும், இறைவா அடுத்த பிறவியிலும் இவர்களை இப்படிஏபிறக்கவிடு, பாசமென்றால் என்னவென்று அடுத்த தலைமுறைக்கும் சொல்ல ஆளில்லை