Load Image
Advertisement

நாட்டுக்கே முன் மாதிரியாகும் கோவை

 Coimbatore is a model for the country    நாட்டுக்கே முன் மாதிரியாகும்  கோவை
ADVERTISEMENT
கால் நுாற்றாண்டுக்கு முன்,நொய்யல் குளங்கள் கால்பந்து மைதானமாகமாறிக் கொண்டிருந்த போது, இவர் துவக்கிய'சிறுதுளி'தான், கோவை குளங்கள் இன்றைக்கும்நிறைத்திருக்க முக்கிய காரணம்.

நொய்யல் நதி, நான் குழந்தையாக குளித்து விளையாடியது; பவானியும், சிறுவாணியும் வரும் முன்னே, என் பாட்டன், முப்பாட்டனின் தாகத்தைத் தீர்த்தது. ஆனால் 90களில், கண்ணுக்கு முன்னே அந்த நதி செத்துக் கொண்டு இருந்தது.


siruthuli@gmail.com
குளங்கள், மைதானங்களாகிக் கொண்டிருந்தன. 2003ல், கோவையில் 1200 அடி ஆழத்திலும் தண்ணீர் வரவில்லை. சிறுவாணியில் 15 நாளுக்குதான் தண்ணீர் இருந்தது.

அந்த சூழ்நிலையில்தான் நொய்யலை மீட்க களம் இறங்கினோம். கிருஷ்ணாம்பதி குளத்தைத் துார் வாரினோம். 'இந்தியாவின் தண்ணீர் மனிதர்' ராஜேந்திர சிங்கை அழைத்து வந்து ஆலோசனை கேட்டோம். அவர் குளத்தையும், கோவையின் இயற்கை அமைப்பையும் பார்த்து விட்டு, 'மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் இருக்கிறீர்கள்.

மழைநீர் சேகரிப்பு மந்திரம்



மலையில் பெய்யும் மழையின் தண்ணீர், கீழே வந்துதான் ஆக வேண்டும். பாத்திரத்தை வைத்துப் பிடிப்பதுதான் உங்கள் வேலை. இதையே தொடர்ந்து செய்யுங்கள்' என்று மழைநீர் சேகரிப்பு மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து, மண் வெட்டியைத் துாக்க வைத்தார்.

அதேபோல, இரண்டே நாள் மழையில், கிருஷ்ணாம்பதி நிரம்பியது. நம்பிக்கையோடு, நாங்கள் நொய்யல் மீட்புப் பணியைத் துவக்கினோம். ஒவ்வொரு குளமாக, கால்வாயாக துார் வாரி, நீர் நிரப்பத் துவங்கினோம். பல ஆண்டுகளுக்குப் பின், நொய்யல் கோவையை கடந்து சென்றது. ஆனால் இப்போது அந்தப் பணியை ஏன் செய்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நொய்யல் அவலமாக மாறியிருக்கிறது.

சாடிவயலில் கண்ணாடி போல வரும் தண்ணீரை, திருப்பூருக்கு கருப்பாக மாற்றி அனுப்பிக் கொண்டிருக்கிறோம். குளங்கள், சாக்கடைகளின் சங்கமமாகிவிட்டன.

நொய்யல் தண்ணீரில் நோய்க்கிருமிகள் அதிகம் உள்ளன. இவ்வளவு மோசமான தண்ணீரையா, நம் சந்ததிக்கு விட்டுப் போகிறோம் என்ற அச்சமும், குற்றவுணர்வும் எழுகிறது.

அதுதான், எங்களை 'நல்ல தண்ணி' என்ற புதிய பயணத்தைத் துவக்கவைத்துள்ளது. குளங்களிலும், நீர் நிலைகளிலும் குப்பையைக் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் எந்தவொரு குற்றவுணர்வும் இன்றி பலரும் செய்து வருகின்றனர். அரசால் எல்லாம் செய்ய முடியாது; மக்களின் ஒத்துழைப்பின்றி எதுவுமே செய்ய முடியாது.

குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்



குளங்களில் சாக்கடையையும், வீதியெல்லாம் குப்பையையும் வைத்துக் கொண்டு, 'ஸ்மார்ட் சிட்டி' என்று சொல்லிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நீர் நிலைகளில், கால்வாய்களில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட வேண்டும். குளங்களில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை, தன்னார்வ அமைப்புகளால் உருவாக்க முடியாது.

ஆனால் குளங்களுக்கு வரும் கழிவுநீரை, வெட்டிவேர், கல்வாழை பயன்படுத்தி, உயிரியல் முறையிலான சுத்திகரிப்பு (bio remediation) செய்வதற்கு முயல்கிறோம். 'மிதக்கும் தீவுகள்' (floating islands) அமைத்து, தண்ணீரை வடிகட்டி, உயிரி நொதிகளை (bio enzyme) தெளிக்கும் இம்முறை, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரிலும் இது சிறப்பான பலன் தந்துள்ளது.

தேவை விழிப்புணர்வு



விவசாயிகள் கேட்டுக் கொண்டதன்பேரில், சுண்டப்பாளையம், தாளியூர் இரண்டு பஞ்சாயத்துகளிலிருந்து கிருஷ்ணாம்பதிக்கு வரும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்து, 2 கேபின் கட்டமைப்பை உருவாக்கி, 3 கட்டங்களாக கழிவுநீரை வடிகட்டி, அதன்பின் 'பயோ என்சைம்' தெளித்து தண்ணீரைச் சுத்திகரித்து, கால்வாயில் விடுகிறோம். இந்த மாதிரித் திட்டம், நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மக்கள் ஒத்துழைப்புதான் சுத்தமாக இல்லை. கால்வாயில் நாங்கள் குப்பையை எடுத்துச் சுத்தம் செய்தால் அதிலேயே மீண்டும் குப்பை கொட்டுகின்றனர். கால்வாயில் குப்பை கொட்டுவதையும், நேரடியாக கழிவுநீர் கலப்பதையும் தடுத்தால்தான், குளத்துக்கு நல்ல தண்ணீர் வரும். அதனால், 'நல்ல தண்ணி' குறித்து, கோவை மக்களிடம் பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

கழிவுநீர் சுத்திகரிப்பு என்பது மிகப்பெரிய வேலை. அதை அரசால் மட்டுமே செய்ய முடியும். பெரிய பெரிய அளவில் குளங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதை விட, ஆங்காங்கே சிறிய அளவில் (Micro STP) செய்வதுதான் நல்ல விளைவைத் தரும். அதைச் செய்யாமல், நொய்யலை மீட்பது என்பது விழலுக்கு இறைத்த நீராகத்தான் அமையும்.

இருந்தது 34இருப்பது 3, 4



இப்போது 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தில், 1200 கோடி ரூபாய் மதிப்பில், நொய்யல் மீட்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நொய்யல் நதிக்கு வரும் நீர் ஆதாரங்களை மீட்பதுதான் அதில் முதல் வேலையாக இருக்க வேண்டும். ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், இதயம் நின்று உயிர் போய் விடுவது போல, ஓடைகளை அடைத்து விட்டால், மழை நீர் வராமல் நதி செத்துப்போகும்.

நொய்யலுக்கு, மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியிலிருந்து 22 ஓடைகளும், வடக்கிலிருந்து 12 ஓடைகளுமாக 34 ஓடைகளில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இப்போது ஐந்துக்கும் குறைவான ஓடைகள்தான் உயிர்ப்புடன் உள்ளன. நண்டங்கரை, முண்டந்துறை இரண்டையும் நாங்கள் முழுமையாக மீட்டுள்ளோம்; மசவரம்பு ஓடையில் கொஞ்சம் தண்ணீர் வருகிறது. அதிலும் கழிவுநீர் கலக்கிறது.

மற்ற ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன; வண்டித்தடமாக மாறியுள்ளன; புதர் மண்டிக்கிடக்கின்றன. அந்த ஓடைகளை மீட்காமல் நொய்யல் மீட்பு சாத்தியமில்லை. நரசீபுரத்தில் தடுப்பணை புதர் மண்டிக்கிடந்தது. அதைத் துார் வாரினோம். இப்போது 200 மீட்டர் நீளத்துக்கு, 12 அடி ஆழத்துக்குத் தண்ணீர் நிற்கிறது. அதேபோல, ஓடைகளைத் துார் வாரினால் தாராளமாக தண்ணீர் கிடைக்கும்.

தொழில்நுட்பகமிட்டி தேவை



முதலில், நான்கைந்து ஓடைகளை சர்வே செய்து, அதை எப்படி சரி செய்வது என்று ஆலோசிக்க வேண்டும். கோவையில் தொழில் நுட்ப நிபுணர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். தொழில் மற்றும் வர்த்தக சபை, கொடிசியா உள்ளிட்ட தொழில் அமைப்புகளிடம் தொழில் நுட்ப ஆலோசனை கேட்க வேண்டும்; தேவைப்படின் ஒரு கமிட்டியை அமைக்க வேண்டும்; மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்த வேண்டும்.

இது குறித்து, மக்களுக்கும் நல்ல புரிதல் தேவைப்படுகிறது. தண்ணீர் மாசுபட்டால் என்ன பிரச்னை வரப்போகிறது என்று பலர் நினைக்கிறார்கள். குடிக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து குடித்து விடலாம். குளிப்பதற்கும், மற்ற பயன் பாட்டுக்கும் நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். அது மாசுபட்டதால்தான், கோவையில் குழந்தைகளுக்கு தோல் நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளது; இது இன்னும் மோசமாக வாய்ப்புள்ளது.

நம் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய சொத்து, நல்ல காற்றும், நல்ல தண்ணீரும்தான். நல்ல காற்றுக்காகத்தான் கோவையின் பல்வேறு பகுதிகளில், பல ஆயிரம் மரங்களை 'சிறுதுளி' வளர்த்துக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக நல்ல தண்ணீருக்காக, குளங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும், அதைச் சுத்திகரிக்கவும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

'சிறுதுளி'யால் மட்டும் இது சாத்தியப்படாது; அரசின் ஆதரவு வேண்டும்; மக்களின் ஒத்துழைப்பு வேண்டும்; ஊர் கூடி தேர் இழுப்பது போல, நொய்யலை மீட்பது நம் அனைவரின் கையிலும்தான் இருக்கிறது.


நமக்கு இருப்பது ஒரே நதி... அதைத்தான் நம்பியிருக்கிறது நம் சந்ததி!


-வனிதா மோகன், 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர்-


கட்டுரையாளர், 'பிரிக்கால்' நிறுவன நிர்வாகி; 'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர். நொய்யல் நதி மீட்பில் முக்கிய பங்காற்றியவர்.



வாசகர் கருத்து (10)

  • PNR - Coimbatore,இந்தியா

    மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்த மேலும் தன் ஆர்வத்துடன் வந்து செயல் பட மாவட்ட வரியாக email ID உருவாக்கி அதில் கருத்துக்கள் பரிமாறவும், உடல் உழைப்பு பண உதவி கொடுப்பவர்கள் என்று அவர்கள் தன் அலைபேசி எண் அனுப்பினால் ஒரு குழுவாக இணைந்து செயல் படலாம், கல்லூரிகளில் உள்ள NSS unit மாணவ அமைப்புகளையும் பங்கு ஏற்க செய்து சான்றிதழ்கள் கொடுத்து உக்குவிக்கலம், மொபைல் game இல் வினாக செலவிடுவதை விட்டு சமுதாயத்தில் சேர்ந்து பழகி நல் அனுபவத்தையும் உறவு முறைகளையும் ஏற்படுத்தி கொள்ள முடியும், மனித வாழ்க்கைக்கு சமுதாய உறவு ரொம்ப முக்கியம், அதுவும் social media என்று சுருங்கி விட்டது, நதி ஓட்டத்தை காக்கா படுவது போல் மனித மன ஓட்டத்தையும் காக்கா நாம் முயற்சி செய்ய வேண்டும் அது தற்காலத்தில் மிகவும் அவசியப்படுகிறது, குடும்பத்தை மற்றும் சார்ந்து வாழ்ந்தால் வாழ்க்கை பாடத்தை கற்று போராட முடியாது, இது தாழ்மையான கருத்து வேண்டுகோள் அனைத்து உறவுகளுக்காக நன்றி

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    இங்கு நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில், நைனார் குளத்தில் பணிகள் நடக்கின்றன. ஆனால் அத்தனையும் வீண்தான். நைனார் குளத்தில் திருநெல்வேலி டவுன் பகுதி சாக்கடைகள் முழுவதும் கலக்கிறது. முதலில் இதற்கு மாற்று ஏற்படு பண்ணிவிட்டு, குளத்தை அழகுபடுத்திடும் பணியை செய்ய வேண்டும். ஆனால் குளத்தை அழகுபடுத்தும் பனி மட்டுமே நடக்கிறது. செய்யும் செலவுகள் பூராவும் வீணாக போக போகிறது. ஏற்கனவே நைனார் குளத்தில் படகு விடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒருநாள் கூட படகு ஓட வில்லை, காரணம் குளத்து தண்ணீரின் மணம். அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கமிசன் கிடைத்தால் போதுமே. செய்யும் செலவுக்கு பயன் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன? அவர்கள் கைகாசா செலவாகிறது?

  • Subramanian -

    அருமை. முயற்ச்சிக்கு பாராட்டுதல்கள்.மக்களும் முழுமையாக பங்கேற்க வேண்டும்

    • திகழ்ஓவியன் - AJAX ONTARIO

      அதனால் தான் 17 TRAIN ROOTS WERE DIVERTED பிரேம் CBE என்று இருந்தது இப்ப THROUGH போத்தனுர் என்று இதையும் சொல்லுங்கள்

  • kuppusamy India -

    உங்களை போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர்நிலைகளை பாது காத்தல் ,எதிர் கால சந்ததியினருக்கு செய்யும் மிகசிறந்த செயல்..... வாழ்த்துக்கள்

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    ஆரியரோ ??

    • பாலா - ,

      ஆரியர் என்றாலும் திராவிடர் என்றாலும் மண்ணின் மைந்தர்களே. சில வந்தேறிகளின் வாரிசுகள் அல்லர், தேசாபிமானம் இல்லாமல் இருப்பதற்க்கு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்