ADVERTISEMENT
கோவை:மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் கோவை காம்ராட்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின், 'என். தாமோதரன் வெல்பேர் டிராபிக்கான' மூன்றாம் டிவிஷன் லீக் போட்டி பொள்ளாச்சி என்.பி.டி.சி., மைதானத்தில் நடந்தது. இதில், கோவை காம்ராட்ஸ் மற்றும் என்.ஐ.ஏ., அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த என்.ஐ.ஏ., அணி வீரர்களை கோவை காம்ராட்ஸ் அணியின் ரோகித் ராம் தனது பந்து வீச்சால் மிரட்டினார். ேராகித் ராமின் ஹாட்ரிக் உட்பட நான்கு விக்கெட்கள் கைகொடுக்க கோவை காம்ராட்ஸ் அணியினர் என்.ஐ.ஏ., அணியை 67 ரன்களுக்கு சுருட்டினர்.
வெற்றிக்கு 68 ரன்கள் மட்டுமே தேவை என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கோவை காம்ராட்ஸ் அணியின் மாயா கோபிநாத் (30*) பொறுப்பாக விளையாட, 21.1 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!