பார்முலா 4 கார் போட்டி தயாராகும் சாலைகள்
சென்னை, சென்னையில் நடைபெற உள்ள பார்முலா 4 கார் பந்தய போட்டிக்கான சாலை சீரமைப்புக்கு, எட்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து, 'ரேசிங் சர்க்யூட் பார்முலா 4' கார் பந்தய போட்டியை நடத்த உள்ளன.
இது, டிச., 9, 10ம் தேதிகளில், சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள, 3.5 கி.மீ., சுற்றளவில் இரவு நேர போட்டியாக நடைபெற உள்ளது.
இப்போட்டி, சுவாமி சிவானந்தா சாலை, தீவுத்திடல் மைதானம், கொடி பணியாளர் சாலை, அண்ணாசாலையின் ஒருபகுதி ஆகியவற்றில் நடைபெற உள்ளது.
எனவே, அச்சாலையில், கார் பந்தயம் நடைபெறுவதற்கு ஏதுவான வகையில் மாற்ற, எட்டு கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதற்காக, அச்சாலையில் இருந்த கம்பங்கள், நடைப்பாதைகள் உள்ளிட்டற்றை மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!