பதிவாளர் அலுவலகம் முற்றுகை சென்னையில் திடீர் போராட்டம்
சென்னை, போலி பத்திரங்கள் பதிவானதால் பாதிக்கப்பட்டதாக கூறி, நேற்று 50க்கும் மேற்பட்டோர், மத்திய சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என மூன்று பதிவு மாவட்டங்கள் செயல்படுகின்றன. இதில், மத்திய சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகம், திருவல்லிக்கேணியில் உள்ளது.
ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் சொத்து வாங்குவோர், அதற்கான பத்திரங்களை சார் பதிவாளர் அலுவலகங்களில் தாக்கல் செய்கின்றனர்.
ஆனால், தனி நபர் பெயரில் பத்திரம், பட்டா இருந்தாலும், வக்பு வாரிய பட்டியலில் அந்த சொத்து வருவதாக கூறி, சார் பதிவாளர்கள் பதிவு செய்ய மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், 'வக்பு வாரியத்திடம் சென்று தடையில்லா சான்று பெற்று வந்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்ய முடியும்' என்று சார் பதிவாளர்கள் கூறுகின்றனர்.
அதே நேரம், இங்கு பல இடங்களில் முழுநேர சார் பதிவாளர்களுக்கு பதிலாக உதவியாளர்கள் பொறுப்புசார் பதிவாளர்கள் தங்களை உரிய முறையில் 'கவனிக்கும்' நபர்களின் பத்திரங்களை மட்டும் பதிவு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள மாவட்ட பதிவாளர் மற்றும் உதவி ஐ.ஜி., மகேஷை சந்தித்து முறையிட சென்றனர். மாவட்ட பதிவாளர் இவர்களை சந்திக்க மறுத்த நிலையில், அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து பதிவுத்துறை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!