Load Image
Advertisement

பெயர்ந்து விழுந்த சிமென்ட் காரை பள்ளி ஆசிரியர், மாணவி காயம்

 A school teacher and a student were injured when a cement truck fell    பெயர்ந்து விழுந்த சிமென்ட் காரை  பள்ளி ஆசிரியர், மாணவி காயம்
ADVERTISEMENT
மேற்கு மாம்பலம்,சென்னை, மேற்கு மாம்பலம், கோதண்டராமர் கோவில் தெருவில், சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி உள்ளது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இரண்டு மாடி கட்டடம் கொண்ட பள்ளியின் கீழ் தளத்தில், பிளஸ் 1 வகுப்பறை உள்ளது.

நேற்று வகுப்பறையில் லட்சுமிபதி என்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பறையின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது.

இதில், ஆசிரியர் மற்றும் மாணவி ஒருவர் காயமடைந்தார்.

அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், சிமென்ட் பூசி சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

மாநகராட்சி பள்ளிகளின் சீரமைப்பிற்கு பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


வாசகர் கருத்து (1)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அதுதான் நாங்கள் மக்களின் வரிப்பணத்தில் பேனா சிலை நாட்டுகிறோம், நூற்றாண்டு விழா என்று பல ஆயிரம் கோடியை விரயம் செய்கிறோம். அது போதாதா? உங்களுக்கெல்லாம் படிப்பு அவசியமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement