ADVERTISEMENT
சென்னை, தேசிய ஹாக்கி போட்டியில் சத்தீஸ்கர் அணி, 13 - 1 என்ற கோல் கணக்கில், ஹரியானாவை தோற்கடித்தது.
ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், ஹாக்கி இந்தியா 13வது ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூர், ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்து வருகிறது.
தமிழகம், பஞ்சாப், ஹரியானா உட்பட 28 மாநில அணிகள், நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 'லீக்' முறையில் மோதி வருகின்றன.
நேற்று காலை நடந்த முதல் போட்டியில், சத்தீஸ்கர் - ஹரியானா அணிகள் மோதின.
அதில், துவக்கத்தில் இருந்தே சத்தீஸ்கர் அணி, கோல்களை அடித்து அசத்தியது.அணியின் வீரர் சஞ்சய், 10, 17, 50, 54வது ஆகிய நிமிடங்களில், நான்கு கோல்களை அடித்தார். முடிவில், 13 - 1 என்ற கோல் கணக்கில், சத்தீஸ்கர் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில், பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில், 4 - 2 என்ற கோல் கணக்கில் மஹாராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.
அதேபோல், ராஜஸ்தான் மற்றும் கேரளா அணிகளுக்கு இடையிலான ஆட்டம், 2 - 2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!