குன்றத்துாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்
குன்றத்துார், குன்றத்துார் நகராட்சிக்குட்பட்ட பென்னியம்மன் கோவில் அருகே, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் பயில்கின்றனர்.
இந்நிலையில், பென்னியம்மன் கோவில் தெருவின் சாலையின் இருபுறமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கடைகள், இரும்பு கூரையை ஆக்கிரமித்து அமைத்தனர். இதனால், சாலை குறுகலாகி நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து குன்றத்துார் நகராட்சி நிர்வாகத்தினர், நேற்று ஜே.சி.பி.,இயந்திரம் மூலம் சாலையின் முன்பகுதியில் ஆக்கிரமித்து அமைத்திருந்த இரும்பு கூரையை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!