மே.வங்க பள்ளி ஆசிரியர் தற்கொலை
பல்லாவரம், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆசிட் சர்கார், 46. மேற்கு வங்கத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நந்திதா. சென்னை சாஸ்திரி பவனில், இமிகிரேஷன் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நந்திதா, சென்னையில் பணிபுரிவதால், பல்லாவரம், தர்கா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மகன், மகளுடன் தங்கியுள்ளார். ஆசிட் சர்கார் பல்லாவரம் வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.
பல்லாவரத்திற்கு வந்திருந்த ஆசிட் சர்கார், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். மனைவி வேலைக்கு சென்றார். மகன், மகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர்.
மதியம், வீட்டு கழிப்பறையில் உள்ள ஷவர் கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆசிட் சர்கார் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!