ஹிந்து முன்னணி கண்டனம்
சென்னை,ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
சில நாட்களுக்கு முன் டாக்டர் தேவநாதன் யாதவின் அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை நள்ளிரவில், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
இதுகுறித்து, யாதவ் மகாசபையினர், மயிலை காபாலீஸ்வரரிடம் வேண்டுதல் மனு அளிப்பதாக அறிவித்தனர்.
ஆனால், யாதவ மகாசபையினரை போலீசார் தடுத்தனர். அதோடு ஹிந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன், சென்னை பொறுப்பாளர்கள் செநதில், முருகன் ஆகியோர் கபாலீஸ்வரர் கோவிலுக்குள் புகுந்து, மயிலாப்பூர் சரக போலீஸ் அதிகாரி, வலுக்கட்டாயமாக கைது செய்தார்.
கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவிக்க வந்த பா.ஜ., மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை அனுமதிக்கவில்லை.
எனவே, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட போலீசார் மீது துறை ரீதியான விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!