பயங்கரவாத தடுப்பு பிரிவு ஏற்படுத்த உத்தரவு
சென்னை:போலீஸ் நுண்ணறிவு பிரிவில், பயங்கரவாத தடுப்புப் பிரிவு அமைக்க, 57.51 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
'பயங்கரவாத நடவடிக்கைகளை திறமையாக எதிர்கொள்வதற்காக, மாநில நுண்ணறிவு பிரிவில், புதிதாக பயங்கரவாத தடுப்புப்பிரிவு, 383 பணியாளர்களுடன், 57.51 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்' என, சட்டசபையில் ஏப்., 21ல், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதை செயல்படுத்த, அரசுக்கு டி.ஜி.பி., கருத்துரு அனுப்பினார். பயங்கரவாத தடுப்பு பிரிவு துவக்கவும், அதற்கு, 60.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் அனுமதி கோரப்பட்டது.
இதை பரிசீலனை செய்த அரசு, 190 நிர்வாக பதவிகளை மறு பணி அமர்த்தல் வழியாக நிரப்பவும், 193 நிர்வாக பதவிகள், 36 அமைச்சுப் பணியாளர் பதவிகளை புதிதாக உருவாக்கவும், முதல் கட்டமாக அத்தியாவசிய தேவைக்கு, 28.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் அனுமதி அளித்துள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு, ஒரு டி.ஐ.ஜி., மூன்று எஸ்.பி., நான்கு கூடுதல் எஸ்.பி.,க்கள்.
ஒன்பது டி.எஸ்.பி., 16 இன்ஸ்பெக்டர்கள், 48 சப் - இன்ஸ்பெக்டர்கள், 12 தொழில்நுட்ப சப் - இன்ஸ்பெக்டர்கள், 45 ஏட்டுகள், 22 காவலர்கள், 20 ஏட்டு அந்தஸ்து டிரைவர்கள், 13 காவலர் அந்தஸ்து டிரைவர்கள் பணியிடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது தவிர, அமைச்சு பணியாளர்கள், 36 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இப்பிரிவு, நுண்ணறிவு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யின் கீழ் செயல்படும். இப்பிரிவுக்கு, 44 நான்கு சக்கர வாகனங்கள், 33 இரு சக்கர வாகனங்கள், எட்டு டெம்போ டிராவலர்கள், நான்கு கார்கள் வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 6.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மட்டும் பணிபுரிய விரும்புவோருக்கு, அடிப்படை சம்பளத்தில், 10 சதவீதம் அல்லது 20,000 ரூபாய் ஆகியவற்றில், எது குறைவோ, அத்தொகை மாதந்தோறும் வழங்கப்படும். இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் அமுதா வெளியிட்டுள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!