Load Image
Advertisement

இலங்கை விடுவித்த 15 மீனவர்கள் சென்னை வருகை



சென்னை, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 64 பேரை, இலங்கை கடற்படை, கடந்த அக்டோபர் மாதத்தில் கைது செய்தது. அவர்களை விடுவிக்க, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மத்திய வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுத்தது.

இவர்களில் ஒரு மீன வர் மட்டும், ஏற்கனவே இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு, தற்போது இரண்டாவது முறையாக கைதாகி உள்ளதால், அவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

மற்ற 63 மீனவர்களையும், இந்தியா அனுப்புவதற்கான ஏற்பாடுகளை, இந்திய துாதரகம் செய்து வருகிறது. முதற்கட்டமாக, 15 மீனவர்கள், நேற்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில், மீன்வளத் துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

பா.ஜ., மீனவர் அணி சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் இந்திய துாதரக பராமரிப்பில் இருக்கும் மற்ற மீனவர்கள், அடுத்தடுத்த சில நாட்களில் சென்னை அனுப்பி வைக்கப்படுவர் என, தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement